சொன்ன வாக்கினை நிறைவேற்றிய ஜனாதிபதி
கடந்த
21ஆம் திகதி
தலவாக்கலை தேயிலை
ஆராய்ச்சி நிறுவனத்தில்
நடைபெற்ற நிகழ்வொன்றில்
கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அவர்கள் பயணம்செய்த
விமானம் கொடகலை
பிரதேசத்தில் தரையிரங்கிய வேலையில் ஜனாதிபதி அவர்களை
சூழ்ந்துகொண்ட பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட பிரதேச
வாசிகளுடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.
தமது
பாடசாலையில் நிலவும் சுகாதார வசதி குறைபாடுகள்
குறித்து பாடசாலை
பிள்ளைகள் ஜனாதிபதிக்கு
விளக்கியதுடன், கொடகலை பிரதேச வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ்
வண்டியொன்றை பெற்றுத்தருமாறு மற்றுமொரு கோரிக்கையையும் முன்வைத்தனர்.
ஒரு
வாரம் நிறைவடைவதற்குள்
அக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி
கொடகலை பிரதேச
வைத்தியசாலைக்கு ரூபா 6 மில்லியன் பெறுமதியான நவீன
அம்பியுலன்ஸ் வண்டியொன்றை நேற்று (27) பெற்றுக்கொடுத்தார்.
நேற்று
முற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் மத்திய மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க, கொடகலை
வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர்
சாவித்ரி ரவி
வர்மா ஆகியோரிடம்
அம்பியுலன்ஸ் வண்டிக்கான ஆவணங்கள் ஜனாதிபதி அவர்களினால்
கையளிக்கப்பட்டது.
பிள்ளைகளின்
கோரிக்கையை நிறைவேற்றி கொடகலை தமிழ் மகா
வித்தியாலயத்தின் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய
தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சொன்ன
வாக்கினை நிறைவேற்றிய
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவிற்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment