2016ஆம் ஆண்டு க. பொ( உ/த)ப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில்
அகில இலங்கையில் முதல் 10 இடங்களைப் பெற்ற பாடசாலைகள்
2016ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவு ரீதியாக அகில இலங்கையில் முதல் 10 இடங்களைப் பெற்ற பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2016ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த விபரங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அகில இலங்கை ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதல் 10 இடங்களில் யாழ் பாடசாலைகள் இரண்டும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
விஞ்ஞானப் பிரிவில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடசாலைகளின் விபரங்கள் கீழ்வருமாறு,
விசாகா வித்தியாலயம் - கொழும்பு
தேவி பாலிகா வித்தியாலயம் - கொழும்பு
மெதடிஸ்ட் கல்லூரி கொழும்பு
சென்.தோமஸ் கல்லூரி - கல்கிஸ்ஸ
மியூசியஸ் கல்லூரி - கொழும்பு
வேம்படி பெண்கள் வித்தியாலயம் - யாழ்ப்பாணம்
ரோயல் கல்லூரி - கொழும்பு
ஆனந்த வித்தியாலயம் - கொழும்பு
சாஹிரா வித்தியாலயம் - திருகோணமலை
ஹாட்லி வித்தியாலயம் - பருத்தித்துறை
கடந்த வருடம், மொத்தமாக உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களுள் 30 ஆயிரம் பேர் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment