இந்திய முன்னாள் மத்திய அமைச்சர்

இ அஹமது மாரடைப்பால் மரணம்

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் இ அஹமது (வயது 78) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 நேற்று நடந்த இந்திய நாடாளுமன்றக் கூட்டத்  தொடரின் போது இருஅவைகளும் கூடியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இரு அவைகளுக்கும் பொதுவாக பிரணாப் முகர்ஜி  உரையாற்றிய போது, இ அஹமதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 2  மணியளவில் உயிரிழந்தார் என அறிவிக்கப்படுகின்றது.

கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் சார்பில் வெளியுறவுத்துறை மத்திய  இணை அமைச்சராக இ அஹமது பணியாற்றி வந்தார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் ஆவார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top