தகவல் அறியும் உரிமைச் சட்டம்
திகாமடுல்ல மாவட்டத்தில் வாக்களித்த மக்களின் விருப்பம்
அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள்
போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை
உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
இது இலங்கையில் எதிர்வரும் 3 ஆம் திகதி
நடைமுறைக்கு வருகின்றது. இதற்கான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 2017.01.20 ஆம்
திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் திகாமடுல்ல
மாவட்டத்தில் வாக்களித்த மக்கள் அவர்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகளிடம் தகவல் ஒன்றை அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.
திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதி அமைச்சர்களாக இருக்கும் மக்கள்
பிரதிநிதிகளின் இணைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களின் கல்வித்தகைமைகளை
அறிந்து கொள்ள விரும்புகின்றார்கள். தெரியப்படுத்துவார்களா?
0 comments:
Post a Comment