அமெரிக்காவின் தென் மாநிலங்களை
சூறையாடிய சூறாவளிக்கு 18
பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களை சூறையாடிய கடும் சூறாவளிக்கு
இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாகவும். பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிப் தெற்குப் பகுதியில் உள்ள ஜார்ஜியா, அலாபாமா, புளோரிடா மற்றும் மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட மாநிலங்களின் பல பகுதிகளை நேற்று முழுவதும் சூறாவளி காற்றும் கடுமையாக தாக்கியது. சுழ்ற்றியடித்த சூறாவளிக் காற்றில் வீடு மற்றும் கடைகளின் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சூறாவளிக்கு 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை அறிவிப்பையடுத்து, வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு அரசு சார்பில் தற்காலிக முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்படைந்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment