தேசிய பல் வைத்திய போதனா வைத்தியசாலை
எதிர்வரும் 31ஆம் திகதி திறந்து வைக்கப்படும்
இலங்கை
தேசிய பல்
வைத்திய போதனா
வைத்தியசாலை எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தலைமையில்
திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த
கட்டடத் தொகுதி
பத்து மாடிகளைக்
கொண்டதாகும். இதற்கு 800 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில் நவீன
உபகரண வசதிகளுக்காக
மேலும் ஆயிரம்
மில்லியன் ரூபா
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளை இதன் மூலம்
பெற்றுக் கொள்ள
முடியும்.
இந்த வைத்தியசாலையின் இரண்டாவது
கட்டடத் தொகுதிக்காக
அடிக்கல் நாட்டு
விழாவும் அன்றைய
தினம் இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment