ஜானாதிபதி தேர்தலில் ஒரு எம்பிக்கு ரூபா ஒரு கோடிவழங்கப்பட்டது
அந்த தொகைப்பணம் எனக்கும் கிடைத்தது
முஸ்லிம்.காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத்
18வது திருத்தம் நிறைவேற்ற பணம் பெறவில்லை. ஆனால் ஜானாதிபதி
தேர்தலில் ஒரு எம்பிக்கு ரூபா ஒரு கோடி (100,000,00/) கொடுக்கப்பட்டது. அந்த தொகைப்பணம் எனக்கும் கிடைத்தது
முஸ்லிம்.காங்கிரஸ் தலைவர்
ரஊப் ஹக்கீம்
செய்தாகக் கூறப்படும்
மிகப் பெரிய
தனிப்பட்ட குற்றம்
ஒன்றுக்கு எதிராக,
கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை
மூடி மறைப்பதற்காகவே,
மஹிந்த ராஜபக்ஸவுக்கு முஸ்லிம்.காங்கிரஸ் ஆதரவு
வழங்க நேரிட்டது
இவ்வாறு முஸ்லிம்.காங்கிரஸ்
கட்சியின் தவிசாளரும்
முன்னாள் அமைச்சருமான
பசீர் சேகுதாவூத்
நேற்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு தெரிவித்தார்.
முஸ்லிம்.காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் இது குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில்,
மஹிந்த
ராஜபக்ஸவுடன்
முஸ்லிம் காங்கிரஸை
பசீர்தான் கொண்டு
சேர்த்தார்” என்று, பலர் தன்னைக் குற்றம்
சாட்டி வருவதாகவும்,
முஸ்லிம்.காங்கிரஸ்
தலைவர் ஹக்கீமுக்காக,
அந்தச் சேற்றினை
தான் பூசிக்
கொண்டேன் எனவும் கூறினார்.
இதேவேளை, தகவல் அறியும்
சட்டமூலம் என்ற
ஒன்று வந்தால்.தலைவர் ரவூப் ஹக்கீம் ஒருபோதும்
நேரடி அரசியலுக்குள்
பிரவேசிக்க முடியாது. பிரதேச சபை உறுப்பினராகக்
கூட வரமுடியாது.....+க்+க்+க் அவர்
சிற்றூழியர் வேலையொன்றினைக் கூட, பெற்றுக் கொள்வதற்கான
தகுதியினை இழந்து
விடுவார் எனவும்
தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும்,
தேர்தலில் மஹிந்த
வெற்றி பெற்றவுடன் அவரோடு இருந்த ஒரு
அமைச்சர் ஹக்கீமை
பழிவாங்க முயற்சித்ததாகவும், கோவையை வெளியில் எடுப்போம் என்று அச்சுறுத்திய போது மஹிந்தவுடன் தான் காலில் விழாதவாறு கெஞ்சிப்
பேசி, ஒரு
சமரசத்துக்கு வந்ததாகவும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மேலும் விபரித்துக் கூறினார்.
"ஹகீமின் சொந்ததவறு காரணமாக மாட்டிக்கொண்டுருந்த கட்சியை பாதுகாப்பதற்கு என்னை நானே பலியாக்கிக்கொண்டேன் என்றும் கூறினார்"
"கரையோட்ட மாவட்டம் என்பது இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கான தீர்வாக அமையாது முஸ்லிம்களுக்கான தனியான அதிகார அலகுக்கோரிக்கை அதன் தீவிரத்தன்மை மாறாது தொடரவேண்டும்"
"அதிகாரமுள்ள கட்சியின் தலைமை கிழக்குக்கு வெளியில் இருக்கும்போது அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் கிழக்குக்கு குறிப்பாக அதன் ஸ்தாப உறுப்பினரான ஹஸன் அலிக்கு வழங்கப்படவேண்டும்.
கிழக்கிலுள்ளவன் வெற்றுச் சாக்கைத் தூக்கிச் செல்லவேண்டும்.
மற்றவர் முற்று முழுதாக சாக்கு நிறைய தானியங்களை நிறைத்துக்கொண்டு செல்வதா இதனை அனுமதிக்க
முடியாது."
18வது
திருத்தம் நிறைவேற்ற
பணம் பெறவில்லை.
ஆனால் ஜானாதிபதி
தேர்தலில் ஒரு
எம்பிக்கு ஒரு
கோடி (100,000,00/) கொடுக்கப்பட்டது. அது எனக்கும் கிடைத்தது என்ற தகவலையும் வெளியிட்டார்..
0 comments:
Post a Comment