நாளை 25ஆம் திகதி முதல் பல்கலைக்கழக
அனுமதிக்கான விண்ணப்பங்கள்!
2016 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய 2016-2017 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய கையேடு நாளை 25ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் பெப்ரவரி 20ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் இம்முறை இணையத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பப்பத்திரங்களை சமர்ப்பிக்க முடியுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்கள் அடங்கிய கையேட்டை அங்கீகரித்த விநியோக முகவர்களிடமிருந்து வாங்கலாம் எனவும் நாளைய தினம் பத்திரிகைகளில் மேலதிக விபரங்கள் பிரசுரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.