என் உடல் நிலை பற்றி மக்கள்

தெரிந்து கொள்ள விரும்புகிறார்களா?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி  வியப்பு!

மருத்துவர்கள் தெரிவிப்பு

கடும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்களிடமிருந்து வாழ்த்துச் செய்திள் குவிந்து வருகின்றன. தனது உடல் நிலை குறித்து அமெரிக்க மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்களா என்று அவர் வியப்புற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் 41-ஆவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ் (92), திடீர் உடல் நலக் குறைவு காரணமாக ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top