விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!..
அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதி அமைச்சர். எச்.எம்.எம் ஹரிஸ்
ஒன்றாகக் கலந்து சிறப்பிப்பு!!
மன்னார் மாவட்ட விளையாட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களும் முஸ்லிம்
காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களும் ஒன்றாகக் கலந்து சிறப்பித்துள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (27-01-2017) இடம்பெற்றது.
.இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வர்த்தகத் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment