கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்

31ம் திகதி மீண்டும் ஆரம்பம்


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொகான் டி சில்வா இன்று பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
பல்கலைக்கழத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது உறுதிதெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக வர்த்தகபீட 2ம் 3ம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. மாணவர்களுக்கெதிரான சட்டநடவடிக்கை தொடர்பிலும் நிர்வாகம் எச்சரிக்கை செய்திருந்தது.


பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிரான வழக்கினை இணக்கப்பாட்டுடன் தீர்க்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top