பிரேதங்களை எடுத்து, மேக்கப் போட்டு,
அழகுபடுத்தும் பண்டிகை:
இந்தோனேசியாவில் விசித்திரம்
இறந்த உறவினர்களை தோண்டியெடுத்து அந்த சடலத்தை மீண்டும் கழுவி,
குளிப்பாட்டி, புத்தாடை உடுத்தி, ஒப்பனை செய்து, அழகுபார்க்கும் வினோத பண்டிகை இந்தோனேஷியாவில்
பல நூற்றாண்டு காலமாக கொண்டாடப்படுகிறது.
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் வசித்து வரும் தோஜாரன்ஸ் இன மக்கள், வெளிஉலகத்துக்கு மட்டுமல்ல, இந்தோனேஷிய நாட்டுக்கே பரீட்சியப்படாதவர்கள். இவர்களைப் பற்றிய முழு விவரம் அந்நாட்டு மக்களுக்கே தெளிவாக தெரியாது.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களது உறவினர்கள் யாரும் இறந்துவிட்டால், அவர்களது உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு சாதனங்களால் ஒப்பனைகள் செய்து தங்களது அன்பினை இம்மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒருவர் இறந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு இறப்பு என்ற ஒன்று கிடையாது. நாங்கள் அனைவரும் எப்போது ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதற்காகவே ‘மானேனே’ என்றழைக்கப்படும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும், இந்தப் பண்டிகை மிக முக்கியமான பண்டிகை என்பதால், இந்த மங்களகரமான நாளில் தோஜாரன்ஸ் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் உறவினர்களுக்குள்ளேயே திருமணமும் செய்து கொள்கின்றனர். வேற்று இனத்தவர்களுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.
இந்தப் பண்டிகை நாளன்று, கல்லறை மற்றும் மரப்பொந்துகளில் புதைத்து
வைக்கப்பட்டிருக்கும் உறவினர்களின் உடல்களை தோண்டி எடுத்து, குளிப்பாட்டி, சீவி முடித்து,
பவுடர் உள்ளிட்ட ஒப்பனைப் பொருட்களால் அழகுப்படுத்தி, அந்தப் பிரேதங்களுடன் அன்றைய
நாளை செலவிட்டு மகிழ்கின்றனர்.
அப்போது, இறந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான மது, சிகரெட்,
பன்றி இறைச்சி போன்றவை படையலாக இடப்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும்
இந்த பண்டிகை சமீபகாலமாக மேற்கத்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment