நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டம்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன
நிந்தவூரில் தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நிந்தவூர் அரசயடி தோட்டத்தில் நேற்று 28 ஆம் திகதி மாலை தொடக்கம் இரவு வரை நடைபெற்றது.
சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இம்மாபெரும் பொதுக் கூட்டத்தின்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்காலத்தில் ஆயுர்வேத மூலிகை தோட்டங்களை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கும் திட்டத்தின் கீழ், அதன் முதற்கட்டமாக வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு மூலிகை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய பொதுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், கே.எம் அப்துல் றஸாக் (ஜவாத்), சிப்லி பாருக், கட்சியின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான பளீல் பி.ஏ., எஸ்.எம்.ஏ. கபூர், ஏ.சி. யஹியாகான், ஹனீபா மதனி, அன்சில் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment