இலங்கையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள டிஜிட்டல் மாநாடு
அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில்
அமைச்சரவை அங்கீகாரம்
சகலரும்
உட்படும் டிஜிட்டல்
தேசமாக இலங்கையை
உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை
டிஜிட்டல் பூகோள
நிலையமாக எடுத்துக்
காட்டும் வேலைத்திட்டத்தின்
கீழ், இலங்கை
தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கு
2017ம் ஆண்டு
மார்ச் மாதம்
23 மற்றும் 24ஆந் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் பேஸ்புக், கூகுல்,
சோசல் கெப்பிடல்,
இன்பொயிஸ் போன்ற
பூகோள பிரசித்தி
பெற்ற நிறுவனங்களின்
தலைவர்கள் கலந்து
கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனடிப்படையில்
குறித்த மாநாட்டினை
இலங்கையில் நடாத்துவதற்கு தேவையான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள்
அமைச்சர் ஹரீன்
பிரனார்ந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment