கனடிய மசூதியில் துப்பாக்கி சூடு
6 பேர் பலி 8 பேர் காயம்
அதிர்ச்சியில் முஸ்லிம்ககள்
கனடாவில்
மசூதி ஒன்றிற்குள்
நுழைந்து மர்ம
நபர் நடத்திய
துப்பாக்கி சூட்டில் 6பேர் உயிரிழந்துள்ளனர், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
Quebec நகரில் அமைந்துள்ள மசூதியில் மாலை
8 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகையில்
ஈடுபட்டிருந்தபோது மர்மநபர் ஒருவர்
திடீரென உள்ளே
புகுந்து துப்பாக்கி
சூட நடத்தியுள்ளார்.
இதில்,
6பேர்
உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார்
40 முஸ்லிம்கள் இந்த
தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில்
தொடர்புடைய இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு கனடிய பிரதமர்
தனது ஆழ்ந்த
அனுதாபத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த
சம்பவம் குறித்து
மசூதியின் தலைவர்
Mohamed Yangui கூறியிருப்பதாவது, இது
காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும்
இதுபோன்ற குற்றச்செயல்களில்
ஈடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என
கூறியுள்ளார்.
அமெரிக்காவில்
நுழைய 7 இஸ்லாமிய
நாடுகளுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை
விதித்ததை தொடர்ந்து,
புலம்பெயர்ந்தவர்கள் கனடிய நாடு
அன்புடன் வரவேற்கிறது
என கனடிய
பிரதமர் தன்னுடைய
டுவிட்டர் பக்கத்தில்
அதிரடி அறிவிப்பை
வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.