ஊழல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமரின்
மகள் மரியம்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழி லதிபர்கள், திரைப்பட பிரபலங்கள் சொத்துகளைப் பதுக்கி வைத் திருப்பது கடந்த ஆண்டு மே மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்மூலம் அவரவர் நாட்டில் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது பனாமா பேப்பர்ஸ் ஊழல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு ஊடகங்கள் குற்றம் சாட்டின. இதை உறுதி செய்யும் வகையில் ஜெர்மனி நாளிதழ் ஒன்று, பனாமா பேப்பர்ஸ் ஊழலில் மரியத்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
நவாஸின் மகள் மரியம், மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகி யோருக்கு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் தலா 3 நிறுவனங்கள் இருப்பதாக ஜெர்மனி நாளிதழ் தெரிவித்துள்ளது. லண்டனில் மரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மரியம் கூறிய போது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் எனது குடும்பத்தினர் மீது அபாண்டமான குற்றச் சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நான் எனது தந்தையை சார்ந்து வாழவில்லை. எனது கணவர் குடும்பத்தையே சார்ந்து வாழ்கிறேன் என்று அவர் தெரிவித் துள்ளார்.
0 comments:
Post a Comment