நேத்ரா ரீவி வெளிச்சம் நிகழ்ச்சியில்
நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு
ஏமாற்றமடையும் நேயர்கள்!
நேத்ரா ரீவியில் பிரபல்யமான அரசியல் நிகழ்ச்சியாக வெளிச்சம் நிகழ்ச்சி இருக்கின்றது என்பது உண்மைதான்...
ஆனால் நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உங்கள் கேள்விகளை அரசியல் பிரமுகர்களிடம் கேளுங்கள் என்று பிரச்சாரமும் செய்கின்றார்கள், அதனை நம்பி பல மணிநேர போராட்டத்தின் பின் இணைப்பு கிடைக்கின்றது,
அப்படி இணைப்பு கிடைத்தபின் உள்ளே இருந்து ஒருவர் எம்மைபற்றிய முழுவிபரத்தையும் அறிந்து கொண்டபின்,என்ன கேள்வி கேட்கபோகின்றீர்கள் என்று கேட்கின்றார், அதன் பிற்பாடு தொடர்பில் இணைந்திருங்கள் என்று கூறிவிட்டு அரை மணிநேரம் வரை காத்திருக்க வைத்துவிட்டு தெலைபேசி இணைப்பை துண்டித்து விடுகின்றார்.
இந்த விடயம் பல முறை எனக்கு ஏற்பட்டுள்ளது, கடைசியாக நடந்த நிகழ்ச்சியிலும் எனக்கு இப்படியான நிலைதான் ஏற்பட்டது,
இந்த நிலை எனக்கு மட்டும்தான் ஏற்படுகிறதா?
அல்லது எல்லா நேயர்களுக்கும் ஏற்படுகிறதா? என்று தெறியாமல் உள்ளது...
உண்மையில் கேள்விகளை சந்திப்பதற்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு தைரியம் இல்லை என்றால் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்,
ஒரு வேளை நிகழ்ச்சிக்கு வரும் அரசியல் பிரமுகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களிடம் எங்களை மாட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுவிட்டுத்தான் வருகின்றார்களோ தெறியாது.
அப்படி என்றால் இந்த நிகழ்ச்சிகள் கண்துடைப்பான நிகழ்ச்சிகள்தானா?
இதன்மூலம் சமூகத்தில் கேட்கபட வேண்டிய கேள்விகளுக்கு பதில் பெறுவதற்கு நாங்கள் களம் அமைத்து கொடுக்கின்றோம் என்று கூறிக்கொண்டு அரசியல் வாதிகளை காப்பாற்றும் செயல்கள் செய்வது நியாயம்தானா?
ஆகவே நீங்கள் நடிக்கும் நாடகத்தை, உங்கள் மனம் நோகாமல் நாங்கள் காலத்தையும், நேரத்தையும் செலவு செய்து பார்ப்பதற்கு நாங்கள் என்ன முட்டால்களா?
உங்களுக்கும், அதில் பங்குபற்ற வரும் அரசியல் வாதிகளுக்கும் எங்கள் கேள்விகளில் பயம் இருந்தால், தொலைபேசி அழைப்பை எடுங்கள் என்று பொய்யான விடயத்தை ஏன் கூறவேண்டும்?
இது ஜனநாயக நாடு அதிலும் நல்லரசாங்கம் ஆட்சிசெய்யும் நாடு, கருத்து சுதந்திரம் ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையிலும் மக்களை பூச்சாண்டி காட்டி ஏமாற்றலாம் என்றால் அது நியாயமாகுமா?
தைரியமாக நிகழ்ச்சியை நடத்த துணிவிருந்தால், எங்கள் நியாயமான கேள்விகளுக்கு அச்சபடாமல் பதில் பெற்றுத்தாறுங்கள்.அப்படி இல்லையென்றால் நேரடி தொலைபேசி அழைப்பு என்ற விடயத்தை கைவிடுங்கள்.
நீங்களாகவே நிகழ்ச்சியை நடத்திவிட்டு செல்லுங்கள், எங்களை ஆசைகாட்டி மோசம் செய்யாதீர்கள் என்று கேட்டு விடைபெறுகின்றேன்....
*தயவு செய்து எனது இந்த கருத்தை எல்லோருக்கும் செயார் செய்யுங்கள், உறியவர்களுக்கு இது சேர்வதற்கு உதவிசெய்யுங்கள்......
எம்.எச்.எம்.இப்ராஹிம்.
கல்முனை...
0772355366....
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.