டொனால்ட் டிரம்ப்பின் கொள்கையை எதிர்த்து
ஆஸ்கர் விழாவை புறக்கணித்த ஈரான் நடிகை
Iranian actress boycotts Oscars
to protest Trump
இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்கர்
விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக ஈரான் நாட்டின் பிரபல நடிகை அறிவித்துள்ளார்.
சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் விரைவில் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக ஈரான் நாட்டின் பிரபல நடிகை அறிவித்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஆஸ்கர்’ விருதுக்கு போட்டியிடுகின்றன.
அவ்வகையில், இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான படங்கள், நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் ஈரான் நாட்டு தயாரிப்பான ‘தி சேல்ஸ் மேன்’ என்ற திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற பிரிவின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்படும் ஒரு விற்பனை பிரதிநிதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி அஸ்லர் பர்ஹாடி என்பவரின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை டரானே அலிடூஸ்ட்டி(33)
என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ‘இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கை மதவாத அடிப்படையிலானது.
இந்த நடவடிக்கை கலாச்சார விழாக்களுக்கு பொருந்தினாலும்,
பொருந்தாவிட்டாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்கர் விழாவில் பங்கேற்க மாட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment