ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள்
அறுவருக்கும் பெப்ரவரி 8 வரை விளக்கமறியல்
ஏறாவூரில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரிடம் இன்று நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஏறாவூர் இரட்டைக்கொலைச் சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல்காலம் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்ஐஎம் றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் முகாந்திரம் வீதி அமைந்துள்ள வீட்டிலிருந்த
56 வயதான என்.எம்.சித்தி உஸைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் அண்மையில் பொல்லால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இச்சம்பவம் குறித்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான் இரகசிய வாக்குமூலம் வழங்க அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து இவ்வழக்கு விசாரணை சில நிமிட நேரம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தனியாக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 28), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
0 comments:
Post a Comment