பிரபஞ்ச அழகியாக 64 ஆண்டுகளுக்குப் பின்னர்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிஸ்யுனிவர்ஸ்என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி நடந்தது.
அதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் மிட்டனெரே (வயது24) பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரான்ஸை சேர்ந்தவர். பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். கடந்த ஆண்டு பிரான்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு அடுத்த படியாக 2-வது இடம் கெய்தி நாட்டை சேர்ந்த ரகீல் பெலிசியருக்கு கிடைத்தது. கொலம்பியாவை சேர்ந்த ஆண்ட்ரியா தோவர் 3-வது இடம் பெற்றார்.
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ள ஐரீஷ் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு, “அகதிகளுக்கு பிரான்ஸ் வரவேற்பு அளித்து எல்லைகளை திறந்து விட்டது. உலக மயமாக்குதலை பிரான்ஸ் மக்களாகிய நாங்கள் விரும்புகிறோம். சர்வதேச நாடுகளை சேர்ந்த மக்களை நாங்கள் விரும்புகிறோம்என பதில் அளித்தார்.

பிரபஞ்ச அழகி பட்டத்தை பல் மற்றும் வாய் நலம் பேணுதல் பிரசாரத்துக்கு பயன்படுத்த போவதாக கூறினார். இந்த அழகி போட்டியில் முதல் 13 இடங்களை இந்தோனேசியா, மெக்சிகோ, பெரு, பனாமா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.







The last time France won the Miss Universe pageant was in 1953, on the second edition of the competition. Christiane Martel (pictured), of the town of Piennes in northeastern France, was crowned aged 21 years old

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top