நிந்தவூர் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்
ஏன் செல்லவில்லை?
பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா?
நேற்று நிந்வூரில்
முஸ்லிம்.காங்கிரஸின் ஏற்பாட்டில்
மிகப் பிரமாண்டமான
நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.இந் நிகழ்விற்கு
பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் செல்லவில்லை.இது
தொடர்பில் ஆராய்ந்த
போது
“இந்
நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் தகுந்த
விதத்தில் அழைக்கப்படவில்லை
என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.அது
மாத்திரமல்ல மாகாண சுகாதார அமைச்சர் நஸீரின்
பெயரிற்கு அடுத்தே
பிரதி அமைச்சர்
ஹரீஸின் பெயர் அழைப்பிதழில்
போடப்பட்டுள்ளது.”
இதன்
காரணமாகவே அவர்
செல்லவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.protocol
இன்
படி மாகாண அமைச்சு பிரதி அமைச்சுக்கு
கீழே உள்ளது.மேலும்,ஹரீஸ் கட்சியின்
பிரதித் தலைவர்களிலும்
ஒருவர்.அவரை
அழைப்பதானால் அதற்கு தகுந்த விதத்தில் அழைத்திருக்க
வேண்டும்.
குறித்த
அழைப்பிதழில் ஹரீசின் பெயரை போடுவதற்கு அவரிடமிருந்து
எந்த அனுமதியும்
பெறப்படவில்லை.அனுமதி தேவையில்லை என்று உரிமை
எடுத்து செயற்படுவதாக
இருந்தால் அவரின்
பெயரிற்கு தகுந்த
மரியாதை வழங்கப்பட
வேண்டுமல்லவா?
நேற்று பிரதி
அமைச்சர் ஹரீஸ் கல்முனை மீனவர்களுக்கு கடற்தொழில் உபகரணங்களை
வழங்கி வைத்திருந்தார்.அந் நிகழ்விற்கு
மு.காவின்
தலைவர் அமைச்சர்
ஹக்கீம் நினைத்திருந்தால்
நேரமொதிக்கி சமூகமளித்திருக்க முடியும்.இன்று அமைச்சர்
ஹக்கீம் கலந்து
கொண்ட நிகழ்வுகளை
விட இது
முக்கியமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
மு.காவினுள் பிளவுகள்
அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான பிளவுகளும்
தேவை தானா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 comments:
Post a Comment