தேசிய ஒற்றுமை என்ற தொனிப்பொருளில்
69வது சுதந்திர தின விழா
வெகு கோலாகலமாக நடத்த ஏற்பாடு
69 ஆவது சுதந்திர தின விழாவை பெப்ரவரி 4ம் திகதி வெகு கோலாகலமாக
நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இம்முறை தேசிய ஒற்றுமை என்ற தொனிப்பொருளில் விழா நடைபெறவுள்ளதாக
அமைச்சர் குறிப்பிட்டார்.
விழா ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும்செய்தியாளர் மகாநாடு
நேற்று தகவல் திணைக்களத்தில நடைபெற்றது.
அமைச்சர் வஜிர அபேவர்த்தன விழா தொடர்பாக விளக்கமளிக்கையில்
:
சுதந்திர தின பிரதான வைபவம் காலை 8.00 மணிக்கு காலிமுகத்திடலில்
ஆரம்பமாகும். மாவட்ட மட்டத்தில் 23 வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில்
இயங்கும் இலங்கைத் தூதரகங்களும் சுதந்திர தின விழாக்களை ஏற்பாடுடுள்ளது என'று அமைச்சர்
தெரிவித்தார்.
புத்தசாசன அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ உரையாற்றுகையில்:
இன மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி இம்முறை சுதந்திர விழா ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. பெப்ரவரி 2ம் திகதி சுதந்திர
சதுக்க சுதந்திர மண்டபத்தில் இரவு நேர பிரித் பாராயணம் இடம்பெறும். 3ம் திகதி பம்பலப்பிட்டி
வஜிராராம விஹாரையில் பிக்குமாருக்கான தானம் இடம்பெறும்.
சுதந்திர தினத்தன்று காலை 6.30ற்கு கொழும்பு பொல்வத்த தர்மகீர்த்தியாராம
விஹாரையில் பௌத்த மத அனுஷ்டானங்களும், கொழும்பு பொன்னம்பலவாணேஷ்வரர் ஆலயத்தில் இந்து
மத அனுஷ்டானங்களும், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய பிரார்த்தனைகளும், திம்பிரிகஸ்யாய
தெரேசா தேவாலயத்தில் கத்தோலிக்க மதப் பூஜைகளும் இடம்பெறும். அன்றைய தினம் காலை
7.00 மணிக்கு மஹாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்படும்
என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.