மன்னார் காக்கையன்குளம் அரச தமிழ், முஸ்லிம் கலவன் பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று 5 ஆம் திகதி (2017.08.05) கலந்து கொண்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட செயற்திட்ட அதிகாரி சலீம் கரீம்சலா, அந்நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஐ ஏ ஹமீத், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிடன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment