அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கட்சியின் பிரதித் தலைவரும் மற்றும் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சகோதரர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கடந்த 29.07.2017 திகதி சனிக்கிழமை மத்திய முகாம் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவ்வேலைத் திட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய முகாம் முக்கியஸ்தர் ஹசன் ஹாஜியாரும், முன்னாள் மத்திய முகாம் SLMC பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.லத்தீப் (நவாஸ்) அவர்களும் கலந்து கொண்டனர்.

மத்திய முகாம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் பிரபல வர்த்தகருமான அல்ஹாஜ் உமர்கத்தா அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்த குழுவினர் அவருடன் உரையாடிய போது தற்போது எமது மக்களின் முக்கிய விடயங்களை கவனிப்பதற்கும் குரல் கொடுப்பதற்கும் முஸ்லிம் காங்கிரஸினால் முடியாதிருப்பதையிட்டு கவலை தெரிவித்ததோடு மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரபின் இடைவெளியினை நிரப்புவதற்கு பொருத்தமானவரும் முஸ்லிம்களின் குரலாக திகழும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவர்கள்தான் என தெரிவித்தார்.

மேலும் பல இடங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்து பள்ளிவாசல்களினதும் மக்களினதும், விளையாட்டு கழகங்களினதும் தேவைகளையும், இளைஞர்களின் தொழில்வாய்ப்புக்கள், யுவதிகளுக்கான தையல் பயிற்சி நெசவுக் கைத்தொழில் போன்றவையும் தலைவரினது கவனத்திற்கு கொண்டு சென்று மிக விரைவில் செய்து தருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் முஸ்லிம் காங்கிரஸினால் புறந்தள்ளப்பட்டுள்ள சில பிரதேசங்களுக்கு விஜயம் செய்தபோது, இங்கு கருத்துக் கூறிய மக்கள் கடந்த காலங்களில் சகோதரர் ஜெமீல் அவர்களால் வழங்கப்பட்ட தண்ணீர் வவுசர் மற்றும் பிற உதவிகளையும் நினைவூட்டல் செய்ததுடன் தற்போது தாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என்று சில இடங்களுக்கான குடிநீர் விநியோகம் மற்றும் கொங்கிரிட் வீதிகளைக்கூட போடாமல் புறக்கணிக்கபட்டிருக்கிறோம் என்று அங்கலாய்த்தனர்.

மேலும் பெருந்திரளான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கட்சியின் வளர்ச்சிக்கு உதவ முன்வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாக இருந்தது, இறுதியாக கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக குழு ஒன்றும் அங்கு தெரிவு செய்யப்பட்டது.

மருதூர் ஜஹான்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top