பாராளுமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு கூடும்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 14ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நாளை (06) காலை 10.30 மணி;க்கு பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதால் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சமூகமளிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.
இந்த தீர்மானம் இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைவாக நாளை காலை 10.30 இலிருந்து மாலை 4.00 மணிவரைக்கும் இந்த விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு இந்த விவாதத்தை நடத்துவதற்கு கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top