கண்டி வன்முறையைக் கண்டித்து...
சென்னையில் தூதரகத்தை முற்றுகையிட்ட
 நாம் தமிழர் கட்சி!


இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் கண்டியில்  ஏற்பட்ட இனவாதக் கும்பலின் தாக்குதலால் பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் சொத்துகளுக்கும் பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு இவர்கள் போராட்டம் நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசு நிறுத்த வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top