இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின்
தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 சந்தேகநபர்களுக்கு
28ம் திகதி வரை விளக்கமறியல்

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 10 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. .
மேற்படி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி அதிகாலை கண்டியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவசரகால சட்டத்தின் கீழ் குறித்த சந்தேகநபர்கள் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக அண்மையில் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top