நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசப்பட்ட திரவம்
கொக்கா கோலாவும் லெமனேட்டும் சேர்த்த கரைசலாம்
எஸ்.பி. திசாநாயக்க
தெரிவிப்பு
நேற்று
இடம்பெற்ற நாடாளுமன்ற
அமர்வில் ஆளும்கட்சி
உறுப்பினர்களால் வீசப்பட்டதாக கூறப்படும் திரவம் தொடர்பில்
பல செய்திகள்
வெளிவருகின்றன.
முதலில்
இது கொக்கா கோலாவும் லெமனேட்டும் சேர்த்து
செஞ்ச கரைசல்
தான் அது கொச்சிக்காய் தூள் கரைசல் இல்லை என நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஆனால்
நேற்றைய தினம்
மிளகாய் கரைசலே
வீசப்பட்டது என அனைவரும் தெரிவித்திருந்தனர்.
இதில்
முன்னாள் அமைச்சர்
காமினி ஜெயவிக்ரம
பெரேரா கடுமையாக
பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த
நிலையில், குறித்த
திரவம் மிளகாய்
கரைசல் இல்லை,
குளிர்பானம் மற்றும் எலுமிச்சையின் கலவை என
எஸ்.பி.
திசாநாயக்க கூறியிருந்தார்.
ஆனால்
அது மிளகாய்
கரைசல் தான்
என பாதிக்கப்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
பொலிஸ் தலைமையகம்
இதை உறுதிப்படுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:
Post a Comment