இலங்கை நாடாளுமன்றத்தில்
புதிய ஆயுதம் கண்டுபிடிப்பு!
சர்வதேச ஊடகம் தகவல்
கடந்த
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற
குழப்பத்தின் போது புதிய ஆயுதம் ஒன்று
இலங்கை அரசியல்வாதிகளினால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற
குழப்பத்தின் போது மிளகாய் பொடியே ஆயுதமாக
பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாடாளுமன்ற
குழப்பத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்த நிலையில்
இலங்கை முழுவதும்
தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த
ராஜபக்ஸவுக்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு
எதிர்ப்பு வெளியிடும்
போதே இந்த
பதற்ற நிலைமை
ஏற்பட்டுள்ளது.
இதன்
போது திடீரென
45 நிமிடங்களுக்கு பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள்
நுழைந்த போது,
பொலிஸாரை துரத்தியடிப்பதற்கு
தற்போதைய ஆளும்
தரப்பினர் மிளகாய்
பொடியை ஆயுதமாக
பயன்படுத்தியுள்ளதாக ஒரு வெளிநாட்டு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்
புத்தகங்கள் நாற்காலிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

0 comments:
Post a Comment