மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிக்கு
பிரதமர் தலைமையில் வரவேற்பு
இலங்கையின்
71ஆவது தேசிய
தின நிகழ்வில்
விசேட அதிதியாகக்
கலந்துகொள்ளவுள்ளவிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி
இப்ராஹிம் மொஹமட்
சாலி மற்றும்
அவரது பாரியாரும்
இன்று கொழும்பை
வந்தடைந்தனர்.
இலங்கை
கலாசாரத்திற்கு அமைவாக மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு
வரவேற்களிக்கப்பட்டது. அங்கிருந்த நினைவுப்
புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.
நாளை
(04) இடம்பெறவுள்ள இலங்கையின் 71வது
தேசிய தினத்தில்
பிரதம அதிதியாக
கலந்து கொள்ளும்
பொருட்டு, வெளிவிவகார
அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மாலைதீவு
ஜனாதிபதி இப்ராஹிம்
மொஹமட் சோலி
உள்ளிட்ட குழுவினர்
இன்று (03) முற்பகல் 11.20 மணியளவில் கட்டுநாயக்கா விமான
நிலையத்தை வந்தடைந்தனர். குறித்த குழுவினர்
நாளை மறுதினம்
(05) மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.
இதேவேளை
நாளை மறுதினம்
(05) பிற்பகல் 2.30 மணியளவில், இலங்கை
வர்த்தக சம்மேளனத்தினால்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ள
நிகழ்வொன்றிலும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்
சோலி கலந்து
கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment