ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க நான் தயார்!
முதல்தர வர்த்தகர் தம்பிக்க பெரேரா பகிரங்க அறிவிப்பு



நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன்.

இன, மத, மொழி, கட்சி பேதமின்றி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்.

பொதுவேட்பளராக களமிறங்குவதா இல்லையா என்பது குறித்து தற்போது எனக்கு கூறமுடியாது.

அமைச்சின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் வடமாகாண புகையிரத சேவைக் கட்டமைப்பினை காங்கேசன்துறைவரையில் கொண்டு செல்லும் திட்டத்தில் வடமாகாணத்திற்குச் சென்று அந்த மக்களுடன் நெருங்கிப்பழகிய அனுபவங்கள் நிறைவே உள்ளன.

நாட்டுக்காக செயற்படுவதொன்றும் இயலாத காரியமாக நான் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top