அனைத்து மத்ரஸாக்களையும்
உடனடியாக தடை செய்யவேண்டுமாம்
பந்துல குணவர்தன எம்.பி  தெரிவிக்கின்றார்!


சட்டவிரோதமான முறையில் நாடு முழுதும் செயற்பாட்டில் உள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமான முறையில் இயங்கும் இந்த மத்ரஸா பாடசாலைகளை கல்வியமைச்சு முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றின் கீழ் கொண்டு வருவது பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வை மாத்திரமே வழங்கும்.

இஸ்லாமிய மற்றும் அரபு கற்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்ட மத்ரஸா பாடசாலைகள் அனைத்தும் நாடுதழுவிய ரீதியில் சட்ட விரோதமான முறையிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top