நாட்டிலுள்ள பிரதேச செயலக பிரிவுகளின்
எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது
தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகளை
377 ஆக அதிகரிக்கபட வேண்டும்
அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு
இலங்கையில்
தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகளை 377 ஆக
அதிகரிக்கபட வேண்டும் என அமைச்சர் வஜிர
அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமது
அமைச்சு மேற்கொண்ட
மதிப்பீட்டிலேயே இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஐந்து வருடங்களுககு;
ஒருமுறை பிரதேச
செயலகப் பிரிவுகள்
தொடர்பில் அரசாங்கம்
மதிப்பீடுகளை முன்னெடுக்கிறது.
பிரதேச
செயலகப் பிரிவுகளின்
சனத்தொகை உள்ளடங்கலாக
பல்வேறு விடயங்கள்
இந்த மதிப்பீட்டின்
போது கவனம்
செலுத்தப்படுவதாக அவர் கூறினார். நாட்டில் தற்போது
14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.
இந்த எண்ணிக்கை
மேலும் 500 ஆல் அதிகரிக்கப்பட வேண்டும் என
அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment