தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட
இந்திய மீனவர்களுக்கு பொது மன்னிப்பு
பிரதி
அமைச்சர் பிரபா கணேசன் தெரிவிப்பு
தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்களுக்கும்
பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய
தினம் பிரதி அமைச்சரான பிரபா கணேசன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்த போது
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கொழும்பு
வாழ்மக்களின் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாம்
நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரிமாளிகையில் சந்தித்திருந்தோம். இதன்போது தூக்குத்தண்டனை பெற்றுள்ள ஐந்து இந்திய
மீனவர்களுக்கும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யவுள்ளதாக உறுதியளித்தார் என பிரதி
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தூக்குத்
தண்டனை விதிக்
கப்பட்ட 5 தமிழக
மீனவர்கள் மற்றும்
இலங்கை சிறைகளில்
உள்ள 24 மீனவர்கள்,
அவர்களது 79 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று
நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸயிடம் வலியுறுத்தினேன்.
அதற்கு அவர்,
தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுக்கு
பொது மன்னிப்பு
வழங்க தயாராக
இருப்பதாக கூறினார்.
மன்னிப்பு
வழங்கப்படும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் 5 பேரும்
2 அல்லது 3 நாட்களில் விடுதலையாகி விடுவார்கள் என்றும்
என்னிடம் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். அதே சமயத்தில்
இந்த தண்டனையை
எதிர்த்து இந்திய
தூதரகம் மேல்
முறையீட்டு வழக்கை நடத்தினால் அது முடிய
6 மாதங்களுக்கு மேல் ஆகிவிடும் என்றார். எனவே
இது தொடர்பாக
தனது மன்னிப்பு
வழங்கும் முடிவு
பற்றி கொழும்பில்
உள்ள இந்திய
தூதரக அதிகாரிகளிடம்
தகவல் தெரிவிக்கும்படி
ஜனாதிபதி என்னிடம் கேட்டுக் கொண்டார்.
நானும் இந்தியத்
தூதரக அதிகாரிகளிடம்
தகவல் தெரிவித்து
விட்டேன். இவ்வாறு
பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
பிரபா கணேசன்
தங்களை தொடர்பு
கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
மன்னிப்பு வழங்க
தயாராக இருப்பது
பற்றி கூறியதை
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும்
உறுதி செய்து
உள்ளனர். இதுகுறித்து
அவர்கள் டில்லியில்
உள்ள வெளியுறவுத்
துறை அதிகாரிகளுக்கு
தகவல் கொடுத்துள்ளனர்.
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைக்கும்
வகையில் மேல்முறையீடு
திரும்ப பெறப்படும்
என்று கூறப்படுகிறது.
இது தொ
டர்பாக இன்று
இந்திய வெளியுறவுத்
துறை அதி
காரிகள் முடிவு
எடுக்க உள்
ளனர்.
0 comments:
Post a Comment