நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்
பாகிஸ்தான் அபார வெற்றி கேப்டன் மிஸ்பா சாதனை
நியூசிலாந்துக்கு
எதிரான முதல்
டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
அபார வெற்றி
பெற்றது. இந்த
வெற்றியின் மூலம் கேப்டன் மிஸ்பா உல்
ஹக் புதிய
சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள்
கொண்ட டெஸ்ட்
தொடர் ஐக்கிய
அரபு எமிரேட்சில்
நடக்கிறது. முதல் டெஸ்ட் அபுதாபில் நடந்தது.
முதல் இன்னிங்சில்
பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 566 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து 262 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்ததாக
2வது இன்னிங்சில்
ஆடிய பாகிஸ்தான்
2 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்து
டிக்ளேர் செய்தது.
இதன் மூலம்,
நியூசிலாந்து அணிக்கு 480 ஓட்டங்கள் வெற்றி
இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4ம் நாள்
ஆட்ட நேர
முடிவில் நியூசிலாந்து
8 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களுடன்
தடுமாற்றத்துடன் இருந்தது.
கிரேக்
27, சோதி 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல்
இருந்தனர். கடைசி நாள் ஆட்டம் நேற்று
நடந்தது. இதில்,
கிரேக் (28) வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். சோதி
மட்டும் கடைசி
வரை போராடி
அரைசதம் அடித்தார்.
இவர் 63 ஓட்டங்களில்
ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 231 ஓட்டங்களில் ஆல்
அவுட் ஆகி
தோற்றது. பாகிஸ்தான்
248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின்
மூலம் அதிக
டெஸ்டில் வெற்றி
தேடித் தந்த
பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனையை மிஸ்பா
உல் ஹக்
படைத்தார். இவரது தலைமையின் பாகிஸ்தான் அணி
33 டெஸ்டில் விளையாடி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு
முன் ஜாவித்
மியாண்டட் (34 டெஸ்ட்), இம்ரான் கான் (48 டெஸ்ட்)
தலைமையில் அந்த
அணி 14 வெற்றிகளை
பெற்றதே அதிகபட்சமாக
இருந்தது.
0 comments:
Post a Comment