கிழக்கு மாகாண முதலமைச்சராக
எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி?
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் சபையின் எதிர்கட்சித் தலைவருமான சி. தண்டாயுதபாணி
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகிக்கக்கூடிய வாய்ப்புக்கள் தற்போது ஏற்பட்டிருப்பதாக
அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
37
உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் தற்போது ஆளுங்கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும் - ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் 07 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.
இந்நிலையில்
அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளுநரிடம் ஆட்சியமைக்கக்
கோரமுடியும். அந்த வகையில் சபையின் எதிர்கட்சித் தலைவரான சி. தண்டாயுதபாணி கிழக்கு
மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2012 ஆம் ஆண்டு மாகாண சபைத்
தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களைக்
கொண்டிருந்த போதிலும் 07 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
முதலமைச்சர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்க எங்களோடு முன்வாருங்கள் என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கை நீட்டிய போதும் அச்சந்தர்ப்பத்தை
இக்கட்சி கை நழுவ விட்டது எவ்வளவு துர்ப்பாக்கியமான காரியம் என்பது தற்போது அக்கட்சியின்
தலைமைத்துவங்களுக்கு புரிய வரும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு
மாகாண சபை கலைக்கப்படாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமேயானால் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு மாகாண அமைச்சர் பதவி மாத்திரமே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள்
உள்ளதாகவும் கூறப்படுகின்றது
தற்போது
கிழக்கு மாகாணசபையில்
ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் பிரதான
எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்கள் - ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
07 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களுடன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் இணைந்து
ஆட்சியமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
0 comments:
Post a Comment