அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வாகனத் தொடரணிகளுடன்
பயணம் செய்வதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

-    பிரதமர் ரணில் விக்ரமசிங்க


பாதைகளில் ஏனைய மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பயணங்களை செய்யக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை,முப்படையினரின் பாதுகாப்பு எந்தவொரு அமைச்சருக்கோ பிரதி அமைச்சருக்கோ வழங்கப்படக் கூடாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்பிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.   அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களே அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.   அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து ஆராயும் நோக்கில்  குழுவொன்றை பிரதமர் நியமிக்க உள்ளார்.    இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட உள்ளது.    அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வாகனத் தொடரணிகளுடன் பயணம் செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.    பாதையில் ஏனைய மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பயணங்களை செய்யக் கூடாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top