முன்னாள் வர்த்தக,
வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா சம்மந்தன் ஆகியோர்
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக
மைத்திரிக்கு
ஆதரவளிக்குமாறு வேண்டுகோள்
முன்னாள்
வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்,
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஆகியோர்
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக மைத்திரியின் சின்னமான
அன்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றியடையச்
செய்ய வேண்டும் என தமிழ் பேசும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் அவர்களைச் சந்தித்த முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
உங்கள் கட்சி முழுமையாக ஆதரவை வழங்குவதாகத்
தெரிவித்துள்ளீர்கள். அப்படியானால் தமிழ் பேசும் மக்களான தமிழர், முஸ்லிம்களின் துயரங்களைப் போக்குவதற்கு
உத்தரவாதம் மைத்திரியிடம் பெற்றுள்ளீர்களா? என்று வினவியபோது இதற்கு பதிலளித்த தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் அவர்கள்,
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின்
நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் நன்கு கூர்ந்து கவனித்து வந்தது.
தற்போதய
சூழ்நிலையில் வேட்பாளர்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து 18ஆவது
திருத்தத்தை நீக்கி சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும்
உன்னத நோக்கோடு களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கின்றோம்.
பல்லின
மக்கள் வாழும் இந்நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் சுயகெளரவத்துடனும்
வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன் என மைத்திரி மனட்சாட்சியைத் தொட்டுப்
பேசி வருகின்றார். அவரின் பேச்சை நம்புகின்றோம்.
தமிழ் பேசும் மக்களுக்கு சுய கெளரவம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
சம்மந்தன்
ஐயாவின் கருத்தை ஏற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் சர்வாதிகாரத்திலிருந்து
எமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும் எமது உன்னத விழுமியங்களான சமத்துவம்,
நீதி, தன்மானம், சுதந்திரம் என்பனவற்றை மீளப் பெறுவதற்காக நாம் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவை வெற்றியடையச் செய்ய வேண்டும். இதற்காக அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாக தமிழ்
மொழி பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் கண்டிப்பாக தமது வாக்குகளை அவரின் சின்னமான அன்னப்
பறவைக்கு இட்டு வெற்றி அடையச் செய்ய வேண்டும். என்ற வேண்டுகோளை தமிழ் பேசும் மக்களுக்கு
விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment