முன்னாள் அமைச்சர்
ஏ.ஆர் மன்சூரின்
கல்முனை வீட்டின் மீது தாக்குதல் (படங்கள்)
முன்னாள்
வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் கல்முனையிலுள்ள இல்லத்தின்மீது
இன்று (2015.01.05) அதிகாலை கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது
புதல்வரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச்
செயலாளரான றஹ்மத் மன்சூருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக கல்முனை
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இச்சம்பவங்கள்
தொடர்பாக றஹ்மத் மன்சூர் தகவல் தருகையில்,
நான்
தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் பணிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
சேர் அவர்களுடன் திருக்கோணமலையில் இருந்து கொண்டிருக்கின்றேன். இன்று அதிகாலை 3.30
மணியளவில் கல்முனயிலுள்ள எங்கள் இரண்டு வீடுகளின் மீதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
கல்முனை தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.றியாஸும் அவருடைய குழுக்களும் கல் வீசி தாக்குதல்
மேற்கொண்டுள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில்
கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த எனது தந்தையான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்
அவர்களும் எனது தாயான ஸொஹறா மன்சூரும் மாத்திரமே தாக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்தனர்.
இச்சமயத்தில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நின்ற அமைப்பாளர் றியாஸ் வீடுகள் மீது தாக்குதல்
மேற்கொண்டதுடன் எனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது
மாத்திரமல்லாமல் எங்கள் வீடுகளைச் சுற்றி அத்துமீறி எங்களுக்கு எதிரானவரின் சுவரொட்டிகளை
சட்ட விரோதமாக ஒட்டியுள்ளார்.
இவரின்
இவ்வாறான அராஜக செயல்களை மக்கள் ஒரு போதும் அங்கிகரிக்கமாட்டார்கள். இச்சம்பவங்கள்
தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளோம். இவ்வாறு றஹ்மத் மன்சூர்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment