கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கும்
கல்குடா முஸ்லிம் அரசியல் சமூகமும்,
இலங்கை சிறுபான்மை சமூகங்களும்
இன்றைய
மாண்புமிகு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அவர்களின்
100 நாள் வேலைத்திட்டங்கள்
9ஆம் திகதியுடன்
மிக வேகமாக
நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை முழு
நாடும் அறியும்.
இந்த
100 நாள் வேலைத்திட்டங்களில்
கல்குடா முஸ்லிம்
சமூகத்திற்கு பாதிப்புக்கள் உள்ளதா என்பது பற்றி
நமது கல்குடாத்
தொகுதி முஸ்லிம்
சமூகம் கட்டாயம்
மீள்வாசிப்பது எதிர்கால சமூகத்திற்கு செய்யப் போகும்
மாபெரும் வரலாற்றுக்
கடமை.
தற்போதைய
தேர்தல் முறைமைகள்
பற்றி அனைவரும்
அறிந்த விடயமாயினும்
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத் தேர்தல் தொகுதி,மட்டக்களப்பு தேர்தல்
தொகுதி,பட்டிருப்பு
தேர்தல் தொகுதி
என்று மூன்று
தொகுதிகளும் விகிதாசார தேர்தல் பிரதிநிதித்துவ முறையில்
5 பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கொண்டுள்ளதை
அனைவரும் அறிவோம்.
தற்போதைய
ஜனாதிபதி மாண்புமிகு
மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த 100 நாள்
வேலைத்திட்டத்தில் தேர்தல் முறைமைகள்
மாற்றம், நிறைவேற்று
அதிகார ஜனாதிபதி
முறைமைகள் மாற்றம்
தொடர்பில் கவனம்
செலுத்துவது சமூகத்தின் அனைத்து தரப்பினரதும் கட்டாயக்கடமை.
1.தேர்தல் முறைமைகள் மாற்றம்:
சுருக்கமாக
தொகுதிவாரி தேர்தல் முறைமையில் தற்போதைய நிலவரத்தில்
கல்குடாத் தேர்தல்
தொகுதி தமிழ்
மக்களை பெரும்பான்மையாகக்
கொண்டது என்பதை
அனைவரும் அறிவோம்.
தற்போதிருக்கும்
முறைமையில் தொகுதிவாரி தேர்தல் சட்டம் கொண்டுவரப்பட்டு
தேர்தல் நடைபெற்றால்
கல்குடா முஸ்லிம்
சமூகம் ஏற்படுத்தப்போகும்
இந்தத் தேர்தல்
முறைமையினால் காலாகாலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்படும்.
மாற்று வழிமுறைகள் என்ன???
இது
கல்குடா முஸ்லிம்
சமூகம் மாத்திரம்
தங்களது பெரும்பான்மை
அரசியல் பலத்தை
மாத்திரம் வைத்துக்
கொண்டு பிரதேச
வாதம் பேசிக்
கொண்டு எதையும்
சாதிக்க முடியாது...???!!!
இது
ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல்
தலைமைகளும்,ஓட்டமாவடி,வாழைச்சேனை,ஏறாவூர்,காத்தான்குடி
இதனுடன் தொடர்புபட்ட
அனைத்து ஊர்களும்,சமய,சமூக
அமைப்புக்களான உலமா சபை, தப்லீக் ஜமாஅத்,
ஜமாஅத்தே இஸ்லாமி,
தௌஹீத் ஜமாஅத்துக்கள்,
எஹ்வான் அமைப்புக்கள்,
மஜ்லிஸ் ஸூறா
அமைப்புக்கள், பள்ளிவாயல்கள், சம்மேளனங்கள்,
இன்னபிற அமைப்புக்கள்
என்று வேகமாகவும்,விவேகமாகவும் ஒன்று
கூடி சாதக,பாதகங்களை,பலம்,பலவீனங்களை ஒற்றுமைப்பட்டு
இந்தத் தேர்தலில்
ஒன்றுபட்டு வாக்களித்து மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பிரதான
பாத்திரங்களை வகித்தமாதிரி ஆராய்ந்து மாவட்ட முஸ்லிம்களுக்கான
தேர்தல் தொகுதி
முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட
வேண்டும்.
இந்த
நடவடிக்கைகள் தவறுமானால் ஏறாவூர்,காத்தான்குடி முஸ்லிம்கள்
மட்டக்களப்பு தொகுதி தற்போதும் இரட்டை அங்கத்தவர்
தொகுதிதான்.
தமிழ்
மக்கள் முதலாவது
பிரதிநிதியையும்,இரண்டாவது பிரதிநிதியை ஏறாவூர்,காத்தான்குடி
முஸ்லிம்கள் ஒன்றுபட்டு தொகுதிவாரி தேர்தல் நடைபெற்ற
கடந்த காலங்களில்
தங்களது இரண்டு
ஊர்களுக்குமான ஒரு பிரதிநிதியை வரலாற்றில் தொடர்ந்து
பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர்
தொகுதி என்ற
வகையில் அவர்களுக்கு
பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இறுதிக்கட்டத்தில் ஒன்றுபட்டு பிரதிநிதித்துவத்தை
காப்பாற்றிக் கொள்வார்கள்.
கல்குடாத்
தொகுதி ஒற்றை
அங்கத்தவர் தொகுதி என்ற அடிப்படையில் தமிழ்
மக்கள் சுமார்
85 ஆயிரம் வாக்காளர்களைக்
கொண்ட பெரும்பான்மை
தொகுதி அந்தவகையில்
பாராளுமன்ற பிரதிநிதியை தமிழ் மக்கள் பெற்றுக்
கொள்வார்கள்.
முஸ்லிம்கள்
சுமார் 36 ஆயிரம்
வாக்காளர்களை கொண்டிருப்பதனால் பாராளுமன்ற
பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முடியாது.
அதனால்
முழு வளத்தையும்,பலத்தையும் பாவித்துப்
போராடி இரட்டை
அங்கத்தர் தொகுதி
அல்லது வேறு
ஒரு பெயரில்
புதுத் தேர்தல்
தொகுதி ஒன்றை
உருவாக்குவதற்கு செயற்படுவார்களா???
அல்லது
வெறும் குறுகியகால
கட்சி தாவும்
பிரதிநிதித்துவமும்,பிரதி அமைச்சு
எதிர்பார்ப்பும்தானா கல்குடா முஸ்லிம்
சமூகத்தின் அரசியல் தலைமைகளின் எதிர்பார்ப்பு...???!!!
அல்லது
இந்த வரலாற்றுக்
கடமையை நிறைவேற்றுவார்களா???
சரியான
எல்லாத்தரப்புடனான தொடர்பாடலையும், இணைப்பாக்கத்தையும்
செய்து
தொகுதிவாரி தேர்தல் முறைமையில் இரட்டை அங்கத்தவர்
அல்லது தனித்
தொகுதி ஒன்றை
பெற்றுத்தருவார்களா???
பொறுத்திருந்து
பார்ப்போம்........................................!!!???
2.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றம்:
இந்த
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும்
சட்டம் கொண்டுவரப்பட்டால்
ஒட்டு மொத்த
சிறுபான்மை சமூகங்களின் எந்தத் தேவைகளும், தீர்மானிக்கும்
சக்திகளும் பிரதமர் ஆட்சி முறைமைகளுக்கு தேவைப்படாது.
இன்று
இருப்பதுபோல் எந்த முஸ்லிம்,தமிழ் மக்கள்
சார்பான பிரதிநிதிகளுக்கு
அமைச்சுக்கள்,பிரதி அமைச்சுக்கள்,எவ்வித அதிகாரப்
பங்கீடுகளும் செய்யப்பட வேண்டி கட்டாயம்,அவசியம்,தேவைகள் இருக்காது
பிரதமர் ஆட்சி
முறைமைகளுக்கு.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில்
தமிழ்,முஸ்லிம்
சிறுபான்மை சமூகங்களின் தொகுதிவாரி அடிப்படையில் தேர்வு
செய்யப்படும் சுமார் மொத்தம் 15 அல்லது 20 மொத்த
பாராளுமன்ற உறுப்பினர்களும் காலாகாலம் எதிர்க்கட்சிகளில் குந்தி இருக்க வேண்டி ஏற்படும்.
அதில்
விசேடமாக முஸ்லிம்கள்
அம்பாரை மாவட்டத்தில்
கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில் மூன்று
தொகுதிகளிலும் மூன்று பாராளுமன்றப் பிரதிநிதிகளையும்,
மட்டக்களப்பு
தொகுதியிலிருந்து ஒருதர்,திருகோணமலை மாவட்டம் மூதுர்
தொகுதியிலிருந்து ஒருத்தர் என்ற அடிப்படையில் முழு
இலங்கை முஸ்லிம்
சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி
5 பாராளுமன்ற பிரதிநிதிகள் இருப்பார்கள்.அந்தப் பிரதிநிதிகளின்
எந்தத் தேவைப்பாடும்
அரசாங்கத்திற்கு இருக்காது.
அதனால்
ஜனாதிபதி முறைமை
ஒழிப்பு சட்டத்திருத்தத்திற்கு
அனைத்து முஸ்லிம்,தமிழ் தலைமைகளும்,முற்போக்கு சிங்களத்
தலைமைகளையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறார்கள் இவற்றை சமூகத்தின் மேலிருந்து
கீழ்வரை மக்கள்
மயப்படுத்தி சமூகத்தின் அனைத்து தரப்பின் சிந்தனைகளை,செயற்பாடுகளை தட்டிவிடுவார்களா???
அல்லது
குறுகியகால பாராளுமன்ற அதிகார அரசியலை மாத்தரம்
கூட்டிக்கழித்து கணக்குப்பார்த்து செயற்படுவார்களா???
இன்ஷா
அல்லாஹ் காலம்
பதில் சொல்லும்....................................................!!!???
வை.எல்.மன்சூர்
தலைவர்
- சரீப் அலி
ஆசிரியர் அமைப்பு
கல்குடா
0 comments:
Post a Comment