ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக

அடுத்த மாதம் இந்தியா செல்கின்றார்



இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி என்ற முறையில் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அடுத்த மாதம் இந்தியா செல்வதற்கு மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய பயணத்தை உறுதி செய்யும் விதமாக, “மோடி எங்கள் ஜனாதிபதியை இந்தியாவுக்கு முதலில் வருகை தருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்குசெல்லவிருக்கின்றார்என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மோடி இந்தியா வருமாறு அதில் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் கடிதம் குறித்து கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில் இலங்கையின் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை, மாற்றத்தை விரும்பிய மக்களின் மனப் போக்கை உணர்ந்தது ஆகியன சிறிசேனவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என மோடி குறிப்பிட்டுள்ளார். சார்க் நாடுகளின் நலனில் தமக்கு அதிக அக்கறை இருப்பதாக தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மோடி இரு நாட்டு உறவும் புதிய ஜனாதிபதியின் தலைமையில் மேலும் வலுப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சனை குறித்தும் மோடி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைதியுடன் கூடிய வளமான இலங்கை நிலைக்க வேண்டுமானால், தமிழர்களுக்கான மீன் குடியேற்றம் உள்ளிட்ட நலவாழ்வு திட்டங்களுக்கு புதிய ஜனாதிபதி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மோடி தமது கடிதத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.       

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top