முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக
நிந்தவூரில் கண்டன ஊர்வலம்
கொடும்பாவியும் எரிப்பு!

முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரில் உருவாக்கப்பட்ட கொடும்பாவி ஒன்று நிந்தவூரிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறிக்கொண்ட சிலரால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள கம்பம் ஒன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டது.
கொடும்பாவி எரியும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள்
§  சமூகத்தைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கும் எட்டப்பரே ஒழிக”,
§  அல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் வைக்க வேண்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குரிய இடத்தில் மஹிந்தவை வைத்துப் பூஜித்த முனாபிக்கே ஒழிக”,
§  இத் துரோகியை ஏன் இன்னும் முஸ்லிம் காங்கிரஸில் வைத்துள்ளீர்கள்? உடன் வெளியேற்றுங்கள்
என்ற வாசங்களை உரத்துக் கோஷங்களாக எழுப்பினர். இவ்வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்தி நின்றனர்.
இதேவேளை இங்குள்ள கல்விமான்கள் சிலர்; தற்போது நல்லாட்சிக்கான ஒரு சூழல் ஏற்பட்டு, அமைதியான முறையில் பல முன்மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இவ்வேளையில் இக்காரியம் பொருத்தமற்ற செயல்பாடு என கண்டனமும் தெரிவித்தனர்.





Ø  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top