விமான விபத்தில்
உயிர் இழந்த பயணிகளின் உடல்கள்
ரஸ்யாவுக்கு
அனுப்பப்பட்டன (படங்கள்)
விமான
விபத்தில் இறந்த ரஷிய பயணிகளின் உடல்களை ரஸ்யாவுக்கு அனுப்பும்
பணிகளை எகிப்து நிர்வாகம் விரைந்து மேற்கொண்டுள்ளது.
எகிப்து
நாட்டின் கடற்கரை
சுற்றுலா நகரமான
ஷரம் எல்
ஷேக் நகரில்
இருந்து ரஷியாவின்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
நகருக்கு கடந்த
சனிக்கிழமை ஏர்பஸ் ஏ321 ரக விமானம்
ஒன்று சென்று
கொண்டிருந்தது.
217 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் சென்று
கொண்டிருந்த அந்த விமானம் சினாய் தீபகற்ப
பகுதியில் விழுந்து
நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த
224 பேரும் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ரஷியாவை
சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது.
விபத்துக்கான
காரணம் குறித்து
விசாரணை நடந்து
வரும் நிலையில்,
விபத்தில் இறந்த
ரஷிய பயணிகளின்
உடல்களை ரஷியாவுக்கு
அனுப்பும் பணிகளை
எகிப்து நிர்வாகம்
விரைந்து மேற்கொண்டுள்ளது.
அதன்படி
144 உடல்கள் அடங்கிய முதல் விமானம் நேற்று
காலையில் உள்ளூர்
நேரப்படி சுமார்
6 மணிக்கு செயின்ட்
பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ
விமான நிலையத்தை
சென்றடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது. பின்னர்
அந்த உடல்கள்
அனைத்தும் ஒரு
பெரிய லாரியில்
ஏற்றப்பட்டு, அடையாளம் காண்பதற்காக அருகில் உள்ள
சவக்கிடங்கு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீதமுள்ள
ரஸ்ய பயணிகளின் உடல்களை
ஏற்றிக்கொண்டு 2-வது விமானம் நேற்று மாலையில்
எகிப்தை விட்டு
புறப்பட்டது. இந்த விபத்தால் ரஸ்யாவில் நேற்று முன்தினம்
ஒருநாள் துக்கம்
அனுஸ்டிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment