யோசிதவின் பிணை வழங்குவது குறித்த வழக்கு

முடிவு எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்க நடவடிக்கை

விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸவிற்கு  பிணை  வழங்குவது குறித்துஎதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில், யோசித ராஜபக்ஸ கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேருக்கு, உயர் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிணை மனு இன்றைய தினம் பரிசீலனை செய்யப்பட்ட போது, குறித்த மனு தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று கொழும்பு உயர் நீதிமன்றிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, விமல் வீரவன்ச, ஜீ.எல்.பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அலகபெரும மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top