துருக்கியின் தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு!
32 பேர் பலி, 100 க்கும் அதிகாமானோர் காயம்
துருக்கியின்
தலைநகர் அங்காராவில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
32 பேர் உயிரிழந்துள்ள
அதேவேளை, 100 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கி
தலைநகர் அங்காராவில்
உள்ள குவேன்
பூங்காவிற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன்,
குண்டு வெடிப்புக்கு
பின்னர் துப்பாக்கி
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
சர்வதேச ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின்,
கல்வி அமைச்சுக்கு
அருகில் இடம்பெற்ற
இந்த தாக்குதல்
சம்பவத்தில் 32பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,
சம்பவத்தில் காயமடைந்த 100 பேர் ஆபத்தான
நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்
காரணமாக உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,
வாகனம் நிறுத்துமிடத்தில்
வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததால் இந்த
விபத்து ஏற்பட்டதாக
அந்த நாட்டு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த
தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத
நிலையில் குர்தீஷ்
உழைப்பாளர் கட்சி அல்லது வேறு தீவிரவாத
அமைப்பு இந்த
தாக்குதலை நடத்தியிருக்கலாம்
என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment