ஈராக் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல்
47 பேர் பலி 50 பேர் படுகாயம்
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் சற்றுமுன்னர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 47 பேர் வரை பலியாகியிருப்பதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹில்லா மாகாணத்தில் உள்ள பாக்தாத்தில் பொலிசார் பரிசோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த மையத்திற்கு வாகனம் ஒன்று வந்தபோது, அதனை பொலிசார் சோதனை செய்தனர்.
அப்போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட அந்த வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பத்தில் பொலிசார் உட்பட சுமார் 47 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள் கூறியதில், ஈராக்கில் நிகழ்ந்த மிகமோசமான தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் போன்று இருப்பதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment