6-ஆவது டி20 உலகக் கோப்பை
வேகம்,
விறுவிறுப்பு, அதிரடி, சிக்ஸர் மழை என ரசிகர்களுக்கு விருந்து
படைக்கவுள்ள 6-ஆவது இருபது ஓவர் உலகக்
கோப்பை கிரிக்கெட்
போட்டி நாகபுரியில் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
முதல் நாளில் நடைபெறும்
முதல் ஆட்டத்தில்
ஹாங்காங்-ஜிம்பாப்வே
அணிகள் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டத்தில்
ஸ்காட்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7 நகரங்களில்...
பெங்களூரு, தர்மசாலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை,
நாகபுரி, தில்லி
ஆகிய 7 நகரங்களில்
இந்தப் போட்டி
நடைபெறுகிறது.
கத்துக்குட்டி
அணிகள் பங்கேற்கும்
முதற்கட்ட ஆட்டமான
முதல் சுற்று
13-ஆம் தேதியோடு
நிறைவடைகிறது. வரும் 15-ஆம் திகதி முதல் 28-ஆம்
திகதி
வரை சூப்பர்
10 சுற்று நடைபெறுகிறது.
அதில் ஒவ்வொரு பிரிவிலும்
முதல் இரு
இடங்களைப் பிடிக்கும்
அணிகள் அரையிறுதிக்கு
முன்னேறும். முதல் அரையிறுதி வரும் 30-ஆம்
திகதி
தில்லியிலும், 2-ஆவது அரையிறுதி 31-ஆம் திகதி மும்பையிலும்
நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ஆம்
திதி
கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
ரூ.67
கோடி பரிசுத்
தொகை
டி20 உலகக் கோப்பை
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை இந்திய ரூபாயில் ரூ.67
கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு
ரூ.23.5 கோடியும்,
2-ஆவது இடம்பிடிக்கும்
அணிக்கு ரூ.10
கோடியும், அரையிறுதியில்
தோற்கும் அணிகளுக்கு
தலா ரூ.5
கோடியும் வழங்கப்படுகின்றன.
இதுதவிர போட்டியில்
பங்கேற்கும் அணிகளுக்கு தலா ரூ.2 கோடி
வழங்கப்படுகின்றன.
இதுவரை
சாம்பியன்கள்
2007 இந்தியா
2009 பாகிஸ்தான்
2010 இங்கிலாந்து
2012 மேற்கிந்தியத்
தீவுகள்
2014 இலங்கை
16 அணிகள்
35 ஆட்டங்கள்
இந்த உலகக் கோப்பையில்
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அதில் இந்தியா,
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா,
நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய
8 அணிகள் தரவரிசை
அடிப்படையில் நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
எஞ்சிய அணிகளான
ஜிம்பாப்வே, ஹாங்காங், அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து,
நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கேதசம் ஆகியவை முதல்
சுற்றில் விளையாடுகின்றன.
முதல் சுற்றில் மேற்கண்ட
8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வங்கதேசம், நெதர்லாந்து, ஓமன், அயர்லாந்து
ஆகியவை ஏ
பிரிவிலும், ஹாங்காங், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான்
ஆகியவை பி
பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும்
தங்கள் பிரிவில்
இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு
முறை மோதும்.
அதன் முடிவில்
இரு பிரிவிலும்
முதலிடம் பிடிக்கும்
அணிகள் சூப்பர்
10 சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெறும். முதல்
சுற்று ஆட்டங்கள்
செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) தொடங்குகின்றன.
சூப்பர்
10 சுற்றில் 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்த சுற்று
மார்ச் 15-ஆம்
திகதி
தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும்
மோதுகின்றன. டி20 உலகக் கோப்பையில் மொத்தம்
35 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சூப்பர்-10
சுற்று
குரூப்
1
இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்கா
இலங்கை
மேற்கிந்தியத்
தீவுகள்
தகுதி பெறும் அணி
குரூப்
2
ஆஸ்திரேலியா
இந்தியா
நியூஸிலாந்து
பாகிஸ்தான்
தகுதி பெறும் அணி
0 comments:
Post a Comment