மின்னஞ்சலின் ஸ்தாபகர் ரே டாம்லின்சன்
74ஆவது வயதில் காலமானார்



மின்னஞ்சலின் ஸ்தாபகர் ரே டாம்லின்சன் தனது 74ஆவது வயதில் காலமானார்.
ஒரு உண்மையான தொழில்நுட்ப முன்னோடியாக கருதப்படும் இவரின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன்  இவரின் மறைவை ரே டாம்லின்சனின் பேச்சாளர்  உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரே டாம்லின்சனின் பேச்சாளர்,
கடந்த சனிக்கிழமை அவர் உயிரிழந்தார். ஆனால் அது உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் அறிவிக்க தாமதமானது.டாம்லின்சன் கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியவராவார்.
தொழிநுட்ப பாதையில் டாம்லின்சன் கடந்து சென்ற பாதை மிக அளப்பரியது. ARPANET எனப்படும் இவரது கண்டுபிடிப்பு 1971ஆம் ஆண்டு முழுவடிவமாக மாறி உலகயையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது எனலாம்.


தற்போது மிகவும் துரிதமாகவும் கட்சிதமாகவும் செய்திகளை அனுப்பவும் பெறவும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஊடகமாக மின்னஞ்சல் காணப்படுகின்றது. அதனை ஸ்தாபித்தவர் எம் மத்தியில் தற்போது இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top