அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட்
ரீகனின்
மனைவி நான்ஸி ரீகன் 94 வயதில் மரணம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகனின் மனைவியும், முன்னாள் ஹாலிவுட் நடிகையுமான நான்ஸி ரீகன், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது வயது 94. மாரடைப்பு காரணமாக நான்சி உயிரிழந்ததாக, அவரது உதவியாளர் அல்லிஸன் பேரியோ, அமெரிக்க ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ரோனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 1981இல் பதவியேற்றார். அவர் பதவியில் இருந்த எட்டு ஆண்டுகளிலும், நான்ஸிதான் திரைமறைவில் இருந்து இயக்கி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனது கணவரின் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் நான்ஸி மீது புகார் கூறப்பட்டது.
கடந்த
1994ஆம் ஆண்டில் "அல்செய்மர்' என்ற மறதி நோயால், ரீகன் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து, அவர் இறந்த 2004ஆம் ஆண்டு வரை, உடன் தங்கியிருந்து நான்ஸி கவனித்துக் கொண்டார். ரீகனின் மறைவுக்குப் பிறகு, அவரது சொந்த மாகாணமான கலிஃபோர்னியாவுக்கு நான்ஸி சென்றுவிட்டார். அங்குள்ள நலிவடைந்த மக்களுக்காகப் பணியாற்றி வந்தார். "அல்செய்மர்' மறதி நோயால் பாதிக்கப்படுவோரின் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக நான்ஸி போராடி, வெற்றி பெற்றார்.
0 comments:
Post a Comment