இலங்கை மின்சார சபைஅதிகாரிகளின்
அசமந்தபோக்கே மின்சாரத் தடைக்குக் காரணம்!


நாடு முழுவதும் அண்மையில்  ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு  இலங்கை மின்சார சபை அதிகாரிகளின் அசமந்தபோக்கே காரணம் என்று நேற்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெர்ரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெடிப்புக்குள்ளான மின்மாற்றியை பழுதுபார்க்க வேண்டும் என்று அதன் கண்காணிப்பு பொறியியலாளர் ஒருவருடத்துக்கு முன்னரே இலங்கை மின்சார சபை பொதுமுகாமையாளருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தாராம். எனினும் வெடிப்புக்குள்ளாகும் வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
அத்துடன் மின்மாற்றிகள் பழுதடையும் அவசர தருணங்களில் பயன்படுத்தத் தக்க மாற்று மின்மாற்றி கூட பழுதுநீக்கப்பட்டு, உரிய முறையில் பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.
இவை எல்லாவற்றையும் விட ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு மின்னுற்பத்தி துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தானியங்கி சீராக்கி ஒன்றின் மூலம் நுரைச் சோலை அனல் மின்நிலையத்தின் பணிகள் மீண்டும் உரிய முறையில் இயங்கும்வகையான தானியங்கி கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை உரிய கட்டமைப்பு பயன்படுத்தப்படவில்லை. அதனையும் எதிர்காலத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மீள்வலு சக்தி, மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட ஜனாதிபதியிடம் நேற்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top